மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026-ன் இரண்டாம் நாள் நிகழ்வு, முதலீட்டாளர்-புத்தொழில் நிறுவன ஈடுபாட்டில் கவனம் செலுத்தியது

प्रविष्टि तिथि: 16 JUN 2026 12:42PM by PIB Chennai

பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026-ன் இரண்டாம் நாளான ஜூன் 15 அன்று, உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, புத்தாக்கத்தை விரைவுபடுத்துதல், தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துதல், நவீனத் தொழில்நுட்பத் தீர்வுகளின் வணிகமயமாக்கலை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

மத்திய அரசின் முன்னெடுப்பாகவும், கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுவதாகவும் உள்ள 'பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026', என்பது இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழலமைப்பை உலகளாவிய மூலதனம், தொழில்துறை நிபுணத்துவம், ஆராய்ச்சி வலையமைப்புகள், சர்வதேச சந்தைகள் ஆகியவற்றுடன் இணைக்கும் முதன்மையான சர்வதேசத் தளமாக விளங்குகிறது.

இரண்டாம் நாளின் முக்கிய அம்சமாக, விரிவான முதலீட்டாளர்-புத்தொழில் நிறுவன ஈடுபாட்டுத் திட்டம் அமைந்தது. 80-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு; செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்திகள்; சுகாதாரம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம்; உயிரித் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம்; எரிசக்தி மற்றும் பருவநிலைத் தொழில்நுட்பங்கள் என்ற கருப்பொருள்களில், 10-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான உலகளாவிய முதலீட்டாளர்களைக் கொண்ட குழுக்களின் முன் தங்கள் புத்தாக்கங்களை முன்வைத்தன.  40-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து உறுதிசெய்யப்பட்ட தொடர் ஒப்பந்த உறுதிமொழிகளைப் பெற்றன.

முதல் நாளில் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உச்சி மாநாட்டின் நிறைவு நாளில், தொழில்நுட்பப் பூங்காக்கள், பருவநிலைத் தொழில்நுட்பங்கள், தொழில்துறை கரியமிலவாயு  குறைப்பு, உலகளாவிய விரிவாக்க உத்திகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய் திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273441&reg=3&lang=1

 

***

SS/SMB/KR

 


(रिलीज़ आईडी: 2273540) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada