மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்தியாவின் வலுவான தொழில்நுட்பச் சூழலைக் காட்சிப்படுத்தும் வகையில் பிரான்சின் நீஸ் நகரில் பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026 தொடங்கியது
प्रविष्टि तिथि:
16 JUN 2026 4:45PM by PIB Chennai
பிரான்சின் நீஸ் நகரில் பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026-ன் முதல் பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். மத்திய கல்வி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்வு, இந்தியாவின் வலுவான தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்கும், உலகளாவிய பங்குதாரர்களுக்கும் இடையேயான புதுமைக் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் தளமாக விளங்குகிறது.
இந்தியாவின் வலுவான தொழில்நுட்பச் சூழலைக் காட்சிப்படுத்தும் வகையில், பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026 கண்காட்சி, 120 இந்திய புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், 15-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உலகளாவிய பங்குதாரர்களை காட்சிப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் விரைவாக வளர்ந்து வரும் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலை எடுத்துக் காட்டுகிறது. மேம்பட்ட கணிணி, செமி கண்டெக்டர்கள், விண்வெளி தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதார நலன், உற்பத்தி உள்ளிட்ட 13 முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது.
பாரத் புதுமைக் கண்டுபிடிப்பு 2026-ன் முதல் நாளன்று, சர்வதேச புதுமைக் கண்டுபிடிப்பு வழிவகைகள், வலுவான தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மையமாகக் கொண்ட முக்கிய உரைகள், உத்திசார்ந்த உரையாடல், உலகளாவிய தொழில்துறை விவாதங்கள் ஆகியவை நடைபெற்றன. பிற்பகலில் இன்ஃபோசிஸ் நிறுவனர் திரு என் நாராயணமூர்த்தியின் தொடக்க உரையுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பேசிய அவர், உலகளவில் போட்டித் தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா – உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்பு சூழல்களுக்கடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டுத் தீர்மானங்கள், புதுமைக் கண்டுபிடிப்பு சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273045®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2273184)
आगंतुक पटल : 23