ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 15 JUN 2026 3:56PM by PIB Chennai

12-வது சர்வதேச யோகா தினத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று நடத்தியது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜூன் 21 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிகழ்வையொட்டி இது நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் 2026 நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

உலகில் மக்கள் முன்பைவிட நீண்டகாலம் வாழ்வதாக அவர் கூறினார். எனினும் இந்த கூடுதல் காலத்தில் ஆரோக்கியம், செயல்பாடு, சுயசார்பு, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்வதே உண்மையான சவாலாகும் என்று கூறினார். உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனநலத்தை மேம்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் முதுமை காலத்தில், சரியான பாதையை யோகா அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினம் தொடக்கம் முதல் இதுவரை அடைந்துள்ள பயணத்தை நினைவுகூர்ந்த திரு ஜாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டு ஐநா பொதுச் சபையால் இந்தியாவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வு, யோகாவை ஒரு இந்திய பாரம்பரியத்தில் இருந்து, ஆரோக்கியம், நல்வாழ்வுக்கான உலகளாவிய இயக்கமாக மாற்றியது என்று கூறினார்.

தற்போது எல்லைகள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றை கடந்து, யோகா சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆரோக்கியம், நல்லிணக்கம், நலவாழ்வு ஆகியவற்றை எதிர்நோக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான உலகளாவிய இயக்கமாக யோகா உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்திய கலாச்சார உறவுகள் குழுமத்தின் ஒத்துழைப்புடன் உலக நாடுகளில் உள்ள 210 இந்திய தூதரகங்கள் சுமார் 2500 இடங்களில் சர்வதேச யோகா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272997&reg=3&lang=1

***

SS/IR/LDN/KR

 


(रिलीज़ आईडी: 2273120) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam