ஆயுஷ்
டிகலரி, பழைய கன்னட எழுத்து வடிவில் எழுதப்பட்ட ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை மாற்று எழுத்து வடிவில் மாற்றுவதற்கான பயிற்சி
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUN 2026 1:57PM by PIB Chennai
இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் செல்வத்தை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக டிகலரி, பழைய கன்னட எழுத்து வடிவில் எழுதப்பட்ட ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை மாற்று எழுத்து வடிவில் மேற்கொள்வதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று உடுப்பி கீதா மந்திரில் உள்ள நரசிம்ம சபாபவனாவில் தொடங்கியது.
இப்பயிலரங்கை ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுமம், கல்வி அமைச்சகத்தின் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவை ஸ்ரீ வாதிராஜா ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து தொடங்கியுள்ளது.
கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையாகக் காணப்படும் டிகலரி, பழைய கன்னட எழுத்து வடிவங்களிலான ஆயுர்வேதக் கையெழுத்துப் பிரதிகளை வாசித்தல், அவற்றின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றில் அறிஞர்களின் நிபுணத்துவத்தை வளர்ப்பது இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272910®=3&lang=1
***
SS/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2273034)
வருகையாளர் எண்ணிக்கை : 44