பிரதமர் அலுவலகம்
இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:42AM by PIB Chennai
இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவை பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளனர். 2026 பிப்ரவரி 17 அன்று இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையவழி, சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வித் தொடர்புகள், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.
வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும், பிரான்ஸ் 2030 திட்டத்தின் கீழ் உள்ள இலக்கும், எதிர்காலத்தைச் சார்ந்த புதுமைக் கண்டுபிடிப்புக் கூட்டாண்மையை உருவாக்குவதற்கு வலுவான ஒருங்கிணைப்புகளை வழங்குகின்றன என்பதையும், புரட்சிகரமான புதுமைக் கண்டுபிடிப்புகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பதையும் இருதரப்பும் அங்கீகரிக்கிறது. எனவே இந்தியாவும் பிரான்ஸூம் முக்கியமான வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் இணையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், நம்பகமிக்க தொழில்நுட்பச் சூழல், கல்வி, ஆராய்ச்சி பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும், தங்களுடைய கூட்டு முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஒரு கட்டமைப்பாக இந்தியா - பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு 2030 செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றன.
இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030-ல் இடம்பெற்றுள்ளவை:
மும்பை ஐஐடி – பிரான்சில் உள்ள பாரீஸ் தொழில்நுட்ப நிறுவனம் இடையே, மொழிப்பெயர்ப்பு, தொழில் காப்பகம், விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வது,
மும்பை ஐஐடி - பிரான்சில் உள்ள (பாரீஸ் சாக்லே பல்கலைக்கழகம்) இடையே மொழிப்பெயர்ப்பு, தொழில் காப்பகம், விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வது,
மும்பை ஐஐடி – பிரான்சின் நீஸ் நகரில் உள்ள கோட் டி அசூர் பல்கலைக்கழகம் இடையே ஆசிரியர், நிர்வாகப் பணியாளர், துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பு,
தில்லி ஐஐடி – பிரான்சில் உள்ள மைன்ஸ் டெலிகாம் நிறுவனம் இடையே கல்வி, ஆராய்ச்சியில் கல்வி மற்றும் அறிவியில் ரீதியிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு.
தில்லி ஐஐடி – புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அமைப்பு, ராசின்ஸ் டி பிரான்ஸ் இடையே எரிசக்தி, நீடித்ததன்மை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு கூட்டாண்மை.
தில்லி ஐஐடி – புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அமைப்பு, டிஸ்கார்டிஸ் மேம்பாடு, புதுமைக் கண்டுபிடிப்பு (டிடிஐ) தொழில்காப்பகம் இடையே எரிசக்தி, நீடித்த தன்மை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு கூட்டாண்மை,
தில்லி ஐஐடி – புதுமைக் கண்டுபிடிப்புக்கான அமைப்பு, ஜி 2ஐ மேலாண்மை தனியார் நிறுவனம் இடையே உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது, சந்தைக்குரிய பொருட்கள், தீர்வுகளை விரைவுபடுத்துவதற்கான ஆராய்ச்சி ஆகியவற்றிற்காக புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு கூட்டாண்மை உள்ளிட்டவை ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272815®=3&lang=1
***
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2272933)
आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam