பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் தொகுதி பெண் பயிற்சியாளர்கள் பாதுகாப்புப் படைகளில் அதிகாரிகளாக நியமனம்

प्रविष्टि तिथि: 13 JUN 2026 9:28PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் தொகுதி பெண் கேடட்கள், பாதுகாப்புப் படைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது, ராணுவ சேவையில் பெண்களின் பங்களிப்பின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். 148-வது பயிற்சிப் பிரிவின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 2022-ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்த 17 பெண் கேடட்கள் அடங்கிய இந்தத் தொகுதியினர், தத்தமது சேவைகளில் தங்களின் கடுமையான பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

 ராணுவத்தில், 2026 ஜூன் 13 அன்று டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்ற 158-வது வழக்கமான பயிற்சிப் பிரிவின் நிறைவு அணிவகுப்பின் போது ஒன்பது அதிகாரிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி பார்வையிட்டார்.

 விமானப்படையில், 2026 ஜூன் 13 அன்று ஹைதராபாதின் துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற 217-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பின் போது ஐந்து அதிகாரிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த அணிவகுப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

கடற்படையில், 2026-ம் ஆண்டு மே 28 அன்று எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை அகாதமியில் நடைபெற்ற 2026 பருவ நிறைவு அணிவகுப்பின் போது மூன்று அதிகாரிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த அணிவகுப்பைத் தெற்கு கடற்படைக் கட்டளையகத்தின் தலைமைத் தளபதியான வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272587&reg=48&lang=1

***

(Release ID: 2272587)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2272642) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Bengali