விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட இந்தூர் பிரகடனத்தை பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
13 JUN 2026 5:43PM by PIB Chennai
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற வேளாண் அமைச்சர்கள் கூட்டதிற்குப் பின்னர் வெளியிடப்பட்ட, பிரிக்ஸ் நாடுகளின், 'இந்தூர் பிரகடனத்தை' உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதுடன் நிறைவடைந்தது. இது உலகளவில் வேளாண் நடைமுறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்கள், வேளாண் வர்த்தகம், டிஜிட்டல் முறையிலான விவசாயம் போன்ற அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முடிவுகளை இந்தப் பிரகடனம் சுட்டிக் காட்டுகிறது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், உலகளவில் நிலவி வரும் பல்வேறு சவால்கள், நிச்சயமற்ற சூழலில், இந்தக் கூட்டம் உலக நாடுகளுக்கு நம்பிக்கை, கூட்டுப் பொறுப்புணர்வு குறித்த வலுவான செய்தியை வழங்கியுள்ளது என்று கூறினார்.
மத்திய அமைச்சர்கள் திரு. ராம்நாத் தாக்கூர், திரு. பகீரத் சௌத்ரி,துறை சார்ந்த மூத்த அதிகாரிகளுடனும் இணைந்து மேற்கொண்ட இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பிரிக்ஸ் அமைப்பின் வேளாண் பணிக்குழுவின் மூத்த அதிகாரிகள் கூட்டம், அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் ஆகிய இரண்டும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவித்தார். இக்கூட்டங்களில் 100 பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும், அவர்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 60 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில், விவசாயம், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான பிரிக்ஸ் நாடுகளின் முனைப்பை இது பிரதிபலிப்பதாக உள்ளது.. பிரிக்ஸ் நாடுகள் உலகின் மக்கள் தொகையில் பாதி அளவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், உலகளவில், விவசாய நிலத்தில், 42 சதவீதத்தைக் கொண்டிருப்பதாகவும், உலகளாவிய உணவு தானிய உற்பத்தியில் 42 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும் திரு. சௌஹான் சுட்டிக் காட்டினார். இதன் விளைவாக, உலக அரங்கில் பிரிக்ஸ் நாடுகளின் ஒருமித்த குரல் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272502®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2272543)
आगंतुक पटल : 10