பாதுகாப்பு அமைச்சகம்
லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் ராணுவ தளபதியாக நியமிக்கபட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUN 2026 3:20PM by PIB Chennai
தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், 2026 ஜூன் 30 அன்று முதல் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம், தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் டிசம்பர் 1986-ல் ராணுவத்தின் கவசப் படையில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். நாற்பது ஆண்டுகளாக நீடித்த அவரது சிறப்பான ராணுவப் பணியில், செயல்திறன், திறன் மேம்பாடு மற்றும் நிறுவன ரீதியான துறைகளில் பரந்த பணி அனுபவத்தைப் பெற்றுள்ளார். மேலும், ராணுவத்தின் போர்த்திறன், நீண்ட கால மாற்றங்களுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.
அனைத்து நிலைகளிலும் பல்வேறு செயல்பாட்டுச் சூழல்களில் படைகளுக்கு அவர் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார். பாலைவனப் பகுதியில், கவசப் படைப்பிரிவு, மேற்குப் பகுதியில் கவசப் படைப்பிரிவுக் குழு, ஜம்மு-காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை ஆகியவற்றிற்குத் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் பதவியில், ராணுவத்தின் முதன்மையான தாக்குதல் படைப்பிரிவுகளில் ஒன்றான 'சுதர்ஷன் சக்ரா' பிரிவுக்கும் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, தில்லி பிராந்தியத்தின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய அவர், முக்கிய தேசிய, சர்வதேச ராணுவ நிகழ்வுகள், சடங்கு ரீதியான பொறுப்புகளை மேற்பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272460®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2272495)
வருகையாளர் எண்ணிக்கை : 84