நிதி அமைச்சகம்
பீகாரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சுமார் 105 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2026 5:58PM by PIB Chennai
இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைக் களைவதற்கும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், பீகாரில் 104.9 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளது. மேலும், அதன் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் 30.05.2026 அன்று கைது செய்துள்ளது.
கடந்த ஓராண்டில், பீகாரில் உள்ள லக்னோ மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம், கள்ளச் சந்தையில் சுமார் 46.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களையும், மனோவியல் மருந்துகளையும் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 31 பேரைக் கைது செய்துள்ளது.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் ஆகியவற்றின் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தொடர்ந்து கண்காணித்து, இந்திய அரசின் ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267263®=3&lang=1
***
SS/BR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2272213)
வருகையாளர் எண்ணிக்கை : 34