பிரதமர் அலுவலகம்
டாக்டர் சுபாஷ் சி காஷ்யப் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 10:22PM by PIB Chennai
மக்களவை முன்னாள் செயலாளர் டாக்டர் சுபாஷ். சி காஷ்யப் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகச்சிறந்த அரசியலமைப்புச் சட்ட அறிஞர்களில் ஒருவராக டாக்டர் காஷ்யப் திகழ்ந்தார் என்றும், நாடாளுமன்றம், அரசியலமைப்பு தொடர்பான அம்சங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நமது சமூகத்தை செழுமைப்படுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவரது எழுத்துக்களும் உறுதிப்பாடும் குறிப்பிடத்தக்கவை என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“மக்களவை முன்னாள் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி காஷ்யப் மறைவு கவலை அளிக்கிறது. அவர் நாட்டின் மிகச்சிறந்த அரசியலமைப்புச் சட்ட அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தார். நாடாளுமன்றம், அரசியலமைப்பு தொடர்பான அம்சங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நமது சமூகத்தை செழுமைப்படுத்தியது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவரது எழுத்துக்களும் உறுதிப்பாடும் குறிப்பிடத்தக்கவை. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி”.
***
Release ID: 2269123
SS/IR/LDN/RJ
(रिलीज़ आईडी: 2272203)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam