கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வளைகுடாவில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 9:27PM by PIB Chennai
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, அங்கு பணிபுரியும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் இந்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை அமைசச்சர் திரு.சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சூழலில், ஓமன் அருகே 'எம்டி செட்டபெல்லோ' என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தச் செய்தியைக் கேட்டு அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
தாக்குதலுக்குள்ளான அந்தக் கப்பலில் இருந்த மற்ற இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கும், மீட்கப்பட்ட மாலுமிகளைத் தாயகம் அழைத்து வருவதற்கும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாலுமிகள் நல நிதிச் சங்கம் மூலம் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அறிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271901®=48&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2272108)
आगंतुक पटल : 4