உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம்–நாகாலாந்து எல்லைப் பகுதியில் கனிம எண்ணெய் எடுக்க முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 11 JUN 2026 11:37PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில், புதுதில்லியில் நேற்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அரசு, அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கனிம எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியு ரியோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதிலும், 'தற்சார்பு இந்தியா' (Atmanirbhar Bharat) எனும் இலக்கை அடைவதிலும் முக்கிய பங்காற்றும். கனிம எண்ணெய் எடுக்கும் திறன் தற்போது இருப்பதை விட பத்து மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த சிக்கல்களைக் களைந்து, இரு மாநிலங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. இது கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நாகாலாந்தில் உள்ள ஆறு குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதிலும் எண்ணெய் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடகிழக்கு பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கும் பெரும் ஊக்கமாக அமையும்.

இந்த நிகழ்ச்சியல் பேசிய உள்துறை அமைச்சர்  திரு. அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியும் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டிலிருந்து கையெழுத்தான 12 ஒப்பந்தங்களால் இப்பகுதியில் வன்முறை சுமார் 80 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தற்போது இப்பகுதியின் பெரும் பகுதியில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271941&reg=48&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2272075) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati