பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
தேசிய மின் ஆளுகை விருதுகள் 2026: பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னெடுப்புகள் சாதனை
प्रविष्टि तिथि:
11 JUN 2026 5:09PM by PIB Chennai
2026-ஆம் ஆண்டிற்கான தேசிய இ-ஆளுமை விருதுகளில், பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நான்கு முன்முயற்சி திட்டங்கள் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை வென்றுள்ளன. டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலில் கிராம பஞ்சாயத்துகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இது பறைசாற்றுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள 29-வது தேசிய மின் ஆளுகை மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. "வளர்ச்சியடைந்த இந்தியா 2047" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
மொத்தம் 17 விருதுகளில், தங்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அமைச்சக அளவிலான தரவு பகுப்பாய்வு தளம், சிறந்த சேவை வழங்கும் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார முன்முயற்சிகள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்தியாவின் அடிமட்ட நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை இந்த விருதுகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271692®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2271931)
आगंतुक पटल : 7