தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

प्रविष्टि तिथि: 11 JUN 2026 12:51PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் நிறுவனத்தின் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் 2026 ஜூன் 8 அன்று வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் உயிரிழந்தது, 6 பேர் காயமடைந்தது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, அதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

அந்த ஆலை மேலாண்மை நிர்வாகம் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கவில்லை என்று தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த செய்தி உண்மையெனில் இது மனித உரிமைகளை மீறக்கூடியவை என்று ஆணையம் கருதுகிறது. அதனால் இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆந்திரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் காயமடைந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை ஆகிய தகவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271544&reg=3&lang=1

***

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2271652) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu