புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் சாதனை: அமைச்சர் பிரகலாத் ஜோஷி பெருமிதம்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 7:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால், இந்தியா உலகளாவிய தூய்மை எரிசக்தித் தலைவராக உருவெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த சூரியசக்தித் திறன் 3,445 ஜிகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிதக்கும் சூரியசக்தி திட்டங்கள் மூலம் 102 ஜிகாவாட் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.
2014-ல் 81 ஜிகாவாட்டாக இருந்த புதைபடிவம் அல்லாத எரிசக்தி திறன், தற்போது 288 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதேபோல், சூரியசக்தித் திறன் 2.8 ஜிகாவாட்டிலிருந்து 155 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. மேலும், சிறிய நீர்மின் திட்டங்களுக்கான புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இந்தியா மின் பற்றாக்குறை கொண்ட நாடாக இருந்து, இன்று உபரி மின்சாரம் கொண்ட நாடாகவும், உலகளாவிய உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளது என்றார். பாதுகாப்புத் துறையில் சூரியசக்தியைப் பயன்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271289®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2271438)
आगंतुक पटल : 7