நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கால அவகாசத்தை நீட்டித்து, கடன் உச்ச வரம்பையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 5:00PM by PIB Chennai

சிறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் 2.0-ன் கால அவகாசத்தை 31.08.2026 வரை அல்லது ரூ.20,000 கோடி மதிப்பிலான உத்தரவாதம் வழங்கப்படும் வரை (இவற்றில் எது முந்தையதோ அதுவரை) நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 'நிர்வகிக்கப்படும் சொத்துக்களின்மதிப்பில் 20% என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பிற்கு உட்பட்டுபெரிய அளவிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள்சிறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உச்ச வரம்பை ரூ 300 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் செயலாக்க கால அவகாசத்தை நீட்டிப்பதுபெரிய அளவிலான வங்கிசாரா நிதி நிறுவனங்கள்சிறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உச்ச வரம்பு உயர்வு ஆகியவைஇத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவும்சிறு நிதி நிறுவனங்களுக்கு கடனுதவியை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் 2.0-ஐ மத்திய அரசு மார்ச் 20, 2026 அன்று அறிமுகப்படுத்தியது. சிறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு ஏதுவாகவங்கி சாரா நிதி நிறுவனங்கள்சிறு நிதி நிறுவனங்களுக்குவங்கிகள் / நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுதவியின் மீது ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு, 'தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம்மூலம் நிதி உத்தரவாதப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய நிலவரப்படிஇத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.770 கோடி மதிப்பிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271200&reg=3&lang=1 

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2271353) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati