ஆயுஷ்
ஹோமியோபதி மருத்துவ முறை குறித்த பொது விவாதங்களில் பொறுப்புடன் செயல்பபட வேண்டும் என்று தேசிய ஹோமியோபதி ஆணையம் அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 3:49PM by PIB Chennai
ஹோமியோபதி மருத்துவக் கல்வி, பயிற்சி, தொழில்முறை நடத்தை விதிமுறைகள், நெறிமுறைகள் ஆகியவற்றின் தர நிலையை ஒழுங்குபடுத்திப் பராமரிக்கும் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு, ஹோமியோபதி மருத்துவம், அது சார்ந்த மருத்துவர்கள் குறித்து வெளியிடப்படும் பொறுப்பற்ற, ஆதாரமற்ற கருத்துகளுக்கு எதிராக, 08.06.2026 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையை ஹோமியோபதி ஆணையம் வெளியிட்டுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் தர்கேஷ்வர் ஜெயின் தெரிவித்தார்.
அச்சு, மின்னணு, டிஜிட்டல், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக இழிவான, அவதூறான, தவறான, சரிபார்க்கப்படாத கருத்துகள் பரப்பப்படுவது குறித்து கண்காணித்து வரும் ஆணையம், பொது விவாதங்களில், உண்மையான, துல்லியமான, பொறுப்பான தகவல் பரிமாற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளது.
'தேசிய ஹோமியோபதி ஆணையச் சட்டம், 2020'-ன் கீழ், ஹோமியோபதி மருத்துவம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக உள்ளது என்றும், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் கீழ், ஹோமியோபதி மருந்துகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஹோமியோபதி மருத்துவத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகள் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட கல்வி முறையின் கீழ், நடத்தப்பட்டு வருவதாகவும், நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களே இதில் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பதிவுசெய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி, பயிற்சித் தர நிலைகளுக்கு உட்பட்டுத் தகுதி பெறுவதுடன், பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை விதிகளின்படி, ஹோமியோபதி மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் டாக்டர் ஜெயின் கூறினார்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271132®=3&lang=1
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2271343)
आगंतुक पटल : 6