உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றத்தக்க உணவு முறைகள் மூலம் தெற்காசியாவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் – உலக வங்கிக் குழுமம்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 10:33AM by PIB Chennai

தெற்காசியா அதன் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய தருணத்தில் உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள்  பணிகளில் சேருவதால் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இப்பிராந்தியத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. பண்ணைகளுக்கு அப்பாற்பட்ட உணவு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது வேலைவாய்ப்பு, முதலீடு, பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழித்தல் ஆகியவற்றுக்கான மகத்துவமான வாய்ப்புகளை உருவாக்கும் என்று உலக வங்கிக் குழுமம் எடுத்துரைத்துள்ளது.

இப்பிராந்தியத்தின் வேளாண் துறை, ஆண்டுக்கு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையதாகவும், சுமார் 43 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியதாகவும் திகழ்கிறது. எனினும், இப்பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை, 16 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது. தெற்காசியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆண்டுதோறும் இழப்புக்குள்ளாகிறது அல்லது வீணாகிறது.  இது சுமார் 30 கோடி மக்களுக்கு உணவளிக்க போதுமானதாகும்.

வேளாண் மாற்றத்தின் அடுத்தக்  கட்டம் வெறும் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமின்றி உணவு பதனப்படுத்துதல், சேமிப்பு, சரக்குப்போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றை விரிவுபடுத்துவதிலும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நடவடிக்கைகள்,  லட்சக்கணக்கான உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உணவு இழப்பைக் குறைத்து விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும்.

இந்தியாவில் 1950-51-ம் ஆண்டுகளில் 51 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி தற்போது 330 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உள்ளது. பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 4.9 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது. உணவுப் பதனப்படுத்துதல் துறை தற்போது உற்பத்தி மதிப்பு கூட்டலில்  சுமார் 9 சதவீத பங்களிப்பையும் இந்தியாவின் ஏற்றுமதிகளில் சுமார் 13 சதவீத பங்களிப்புகளையும் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270979&reg=3&lang=1

 

***

SS/IR/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2271069) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu