MIFF banner

மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கான ஊடகப் பதிவிற்கு அழைப்பு

நாடு முழுவதிலுமிருந்து பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினர், திரைப்பட விமர்சகர்களிடமிருந்து பெறப்பட்ட பெருமளவிலான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பதிவுகளை எளிதாக்கும் பொருட்டு, 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஊடக அங்கீகார இணையதளத்தை 2026 ஜூன் 10 முதல் 11 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தச் சிறப்புச் சலுகை ஒரு இறுதி வாய்ப்பை வழங்குகிறது. ஜூன் 11 , 2026 -க்குப் பிறகு மேலும் கால நீட்டிப்புகள் வழங்கப்பட மாட்டாது.

 

மும்பையில் உள்ள கோபால்ராவ் தேஷ்முக் மார்க்கில் அமைந்துள்ள தேசிய திரைப்பட மேம்பாட்டு கழக வளாகத்தில், 2026 ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறவுள்ள மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், படங்கள் திரையிடல்கள், கலந்துரையாடல்கள், சிறப்புப் பயிலரங்குகள், தொழில்துறை கலந்துரையாடல்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெறும்.

 

 பத்திரிகையாளர் சந்திப்புகள், பிரத்தியேக ஊடக நிகழ்வுகள் ஆகியவையும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் ஊடகப் பிரதிநிதிகள் உரிய காலத்திற்குள் தங்கள் பதிவை நிறைவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

 

ஊடக அங்கீகார இணையதளம் 2026 ஜூன் 10, ஜூன் 11 ஆகிய தேதிகளில் மட்டுமே திறந்திருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270687&reg=3&lang=1

Release ID : 2270687

****

TV/PLM/SH

 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2270878   |   Visitor Counter: 16