திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐந்து புதிய திறன் மேம்பாட்டு வாகனங்கள் - மத்திய இணை அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 09 JUN 2026 2:02PM by PIB Chennai

இந்தியா முழுவதும் டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துவதிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற திறன் மேம்பாட்டை ஏற்படுத்துவதிலும் ஒரு நடவடிக்கையாக, ஐந்து புதிய, சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் மேம்பாட்டு வாகனங்களை மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி இன்று (09.06.2026) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த வாகனங்களை உருவாக்கியுள்ளது.

 

லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பால் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. இந்தத் திறன் வாகனங்கள் உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் உள்ள சமூகங்களுக்குச் சேவை செய்யும். இதன் மூலம், சூரிய சக்தி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல், வேலைவாய்ப்புப் பாதைகள் ஆகியவை குறித்த தகவல்கள் இளைஞர்கள், பெண்கள், பின்தங்கிய மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படும்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, இந்த வாகனங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் தொழில்நுட்பத்தையும் வாய்ப்புகளையும் கொண்டு செல்லும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்று கூறினார். இந்தத் திறன் வாகனங்கள், இளைஞர்களை வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் லட்சிய மையங்களாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270655&reg=3&lang=1

***

(Release ID : 2270655)

SS/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2270860) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR