பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஏழைகள் நலன், மனிதச் சமூக அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட 12 ஆண்டுகால மாற்றத்தக்க முன்முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

प्रविष्टि तिथि: 08 JUN 2026 10:24AM by PIB Chennai

இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலன்களே இந்த மாற்றங்களின் மையங்களாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக பின்தங்கி இருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதே அரசின் முயற்சியாக உள்ளது என்றும், அந்தியோதயா இயக்கத்தால் அரசு என்றும் உத்வேகம் பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜன்தன் கணக்குகள், நேரடி பலன் பரிமாற்றம் முதல் தூய்மை இந்தியா, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வரை ஒவ்வொரு முன்முயற்சியும் மக்களுக்கு கண்ணியத்தையும், வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய ஒரு எளிமையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் சிறந்ததாக அமைவதை உறுதி செய்வதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். நேரடிப் பலன் பரிமாற்றம், டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களுக்கான ஆதரவு நேரடியாகவும், வெளிப்படையாகவும் சென்றடைவதாக திரு மோடி குறிப்பிட்டார். இது குறைபாடுகளைக் களைந்து, செயல்திறனை மேம்படுத்தி நிர்வாகம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர், இதன் மூலம் ஏழைகளின் நலனை முன்னெடுத்துச் செல்லும் பயணம் மனித சமூக அதிகாரமளித்தலை நோக்கிய கூட்டு இயக்கமாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதாகவும் மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலன்களே இந்த மாற்றங்களின் மையங்களாக உள்ளன. அந்தியோதயா இயக்கத்தால் உத்வேகம் பெற்று, பல  ஆண்டுகளாக பின்தங்கி இருந்தவர்களுக்கு வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே என்றும் நமது முயற்சியாக உள்ளது. ஜன்தன் கணக்குகள், நேரடி பலன் பரிமாற்றம் முதல் தூய்மை இந்தியா, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வரை ஒவ்வொரு முன்முயற்சியும் மக்களுக்கு கண்ணியத்தையும், வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய ஒரு எளிமையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.”

“ஏழைகளின் வாழ்க்கைத் தரம் சிறந்ததாக அமைவதை உறுதி செய்வதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றியுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. நேரடிப் பலன் பரிமாற்றம், டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களுக்கான ஆதரவு நேரடியாகவும், வெளிப்படையாகவும் சென்றடைகிறது. இது குறைபாடுகளைக் களைந்து, செயல்திறனை மேம்படுத்தி நிர்வாகம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஏழைகளின் நலனை முன்னெடுத்துச் செல்லும் பயணம் மனித சமூக அதிகாரமளித்தலை நோக்கிய கூட்டு இயக்கமாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதாகவும் மாறி இருக்கிறது”.

***

Release ID: 2270132

SS/IR/LDN/PD

 


(रिलीज़ आईडी: 2270184) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam