சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி தேசிய உயிரியல் பூங்கா தொடர்பான பிரத்யேக செயலியை மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 07 JUN 2026 7:04PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், இன்று (07.06.2026) புது தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ( National Zoological Park - NZP - என்இசட்பி), நவீன முறையில் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இணையதள டிக்கெட் முன்பதிவை எளிதாக்கவும் உதவும் நோக்கில், 'என்இசட்பி சாத்தி' என்ற செயலியைத் தொடங்கி வைத்தார்அத்துடன் நவீன டிஜிட்டல் வழிகாட்டியைத் தொடங்கி வைத்ததுடன், தானியங்கி டிக்கெட் வழங்கும் மையங்களையும் அவர் திறந்து வைத்தார்.

2026 கோடை விடுமுறைத் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார். அவர் இளம் பங்கேற்பாளர்களின் படைப்பாற்றலைப் பாராட்டியதோடு, மாணவர்களிடையே வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த ஆழமான புரிதலை வளர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்காக உயிரியல் பூங்கா அதிகாரிகளையும் பாராட்டினார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து, தேசிய பூங்காவின் ஒட்டுமொத்த மேம்பாடு, நவீனமயமாக்கல், திறமையான அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த தேசிய பூங்கா, விலங்குகளின் பராமரிப்பு, மேலாண்மையில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270074&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270103) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati