நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மின்-ஆளுகை விருதுகள் - இ-ஜாக்ரிதி தளம் வெள்ளி வென்றது

प्रविष्टि तिथि: 07 JUN 2026 2:19PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் -ஜாக்ரிதி தளம், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய மின்-ஆளுகை விருதுகள் 2026-ல் வெள்ளி வென்றது. 'டிஜிட்டல் மாற்றத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசு செயல்முறைகளை மறுசீரமைத்தல்' என்ற முதல் பிரிவின் கீழ் இது வெள்ளி விருதைப் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட 341 பரிந்துரைகள் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் -ஜாக்ரிதி தளத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும், மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் மூலம் நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதில் -ஜாக்ரிதி முக்கிய பங்கு வகிக்கிறது.

2025 ஜனவரி 1 அன்று தொடங்கப்பட்ட -ஜாக்ரிதி நான்கு பழைய செயலிகளை ஒன்றிணைத்து, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரே காகிதமில்லா தளமாக உருவாக்கியுள்ளது. தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தத் தளம் 2.29 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார்களைப் பதிவு செய்யவும், 2.07 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களைத் தீர்த்து வைக்கவும் வழிவகுத்துள்ளது. இதன் மூலம் 90.75 சதவீத ஒட்டுமொத்த தீர்வு விகிதத்தை அடைந்துள்ளதுடன், நுகர்வோர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எங்கிருந்தும் தடையின்றி நீதியைப் பெறவும் இது வழிவகுக்கிறது.

வேகமான, வெளிப்படையான மற்றும் நுகர்வோருக்கு உகந்த நீதி வழங்கலை உறுதி செய்வதற்காக, நுகர்வோர் விவகாரத்துறை தொடர்ச்சியான முயற்சிகளுடன் இந்தத் தளத்தை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. நுகர்வோர் தடையற்ற இணையவழி குறைதீர்ப்புக்காக -ஜாக்ரிதி (e-Jagriti) தளத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269994&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2270047) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी