பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஜிம்பாப்வே இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஒப்புதல்!

प्रविष्टि तिथि: 04 JUN 2026 7:35PM by PIB Chennai

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இடையேயான முதலாவது 'கூட்டுப் பாதுகாப்பு குழு' கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

 

இரு நாடுகளுக்கும் பொதுவான வான்வழிச் சொத்துகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுகளில் தற்போதைய ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், கூட்டுத் தயாரிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை மேலாண்மை மற்றும் அமைதி காக்கும் படைகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட புதிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

 

இந்தியத் தரப்பில் இணைச் செயலாளர் திரு. அமிதாப் பிரசாத் மற்றும் ஜிம்பாப்வே தரப்பில் நிரந்தரச் செயலாளர் திரு. ஆரோன் டேனியல் டோண்டே நெஹெபெரா ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். ஏரோ இந்தியா 2025 நிகழ்வின் போது கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இலக்குகளைச் செயல்படுத்துவதை இக்கூட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269040&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2269040

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2269111) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam