சுரங்கங்கள் அமைச்சகம்
இந்தியா-பிரிட்டன் முக்கிய கனிமங்களுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலி கண்காணிப்பகம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 4:11PM by PIB Chennai
இந்தியா-பிரிட்டன் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில், ‘இந்தியா-பிரிட்டன் முக்கிய கனிமங்களுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலி கண்காணிப்பகம்’ புதுதில்லியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யுவெட் கூப்பர் ஆகியோர் இணைந்து இதனைத் தொடங்கி வைத்தனர். தூய்மையான எரிசக்தி, மேம்பட்ட உற்பத்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிம வளங்களின் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.
இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, நவீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்த இந்த கண்காணிப்பகம் பெரிதும் உதவும் என்று தெரிவித்தார். மேலும், திட்டத்தின் நோக்கங்களை குறித்து திருமதி யுவெட் கூப்பர் பேசுகையில், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கூட்டுறவிற்கு இந்தத் தரவு சார்ந்த தளம் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்றார். தன்பாத் ஐஐடி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், கனிம விநியோகத்தில் உள்ள உலகளாவிய சிக்கல்களைக் கண்காணித்து கொள்கை வகுப்பாளர்களுக்கு துல்லியமான முடிவுகளை எடுக்க உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268900®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269083)
आगंतुक पटल : 11