பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு நிர்வாக நடைமுறைகளின் சிறப்பான அமலாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் மின் ஆளுமைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 04 JUN 2026 2:18PM by PIB Chennai

மின்னணு நிர்வாக நடைமுறைகளைச் சிறப்பான முறையில் அமல்படுத்துவதை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மின் ஆளுமைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 2026-ம் ஆண்டுக்கான 29-வது மின் ஆளுமை தேசிய விருதுகளை பெறும் 7 பிரிவுகளில் கிராமப்புற பஞ்சாயத்தும் ஒன்றாகும். கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகளில் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் வாயிலாக  சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

7 பிரிவுகளில் 17 திட்டங்கள் / முயற்சிகள் இந்த தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மின் ஆளுமைத் துறையில் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் 10 தங்க விருதுகள், 6 வெள்ளி விருதுகள், ஒரு நடுவர் குழு விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

மனநலம், போதைப் பொருள் பயன்பாடு சார்ந்த பிரச்சனைகளுக்கான பரிசோதனை, மேலாண் நடைமுறைகளை இதர தொற்றா நோய்களுடன் ஒருங்கிணைப்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வுகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த உளவுத் தகவல்கள் பகிர்ந்து கொள்வதற்கும் டிஎன்எஸ் சேவைகளுக்காகவும் அகமதாபாதில் உள்ள இஸ்ரோ விண்வெளிப் பயன்பாட்டு மையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் முறையிலான வங்கிச் சேவைகளை ஒருங்கிணைத்ததற்காக பரோடா வங்கி தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில், தரவு சார்ந்த ஆளுமை நடைமுறைகளுக்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 29-வது தேசிய மின் ஆளுமை மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268817&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2269019) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Bengali , Bengali-TR , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu