தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு நுகர்வோர் குறைதீர்ப்பு ஒழுங்குமுறை வரைவு விதிகள் மீதான கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
04 JUN 2026 2:21PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ள தொலைத் தொடர்வு நுகர்வோர் குறை தீர்ப்பு ஒழுங்குமுறை (4-வது திருத்த வரைவு விதிகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக அதன் இணையதளத்தில் கடந்த மே மாதம் 7-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த வரைவு விதிகள் மீதான கருத்துகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு ஒழுங்கு விதிகள் திருத்தம் மீதான எழுத்துப்பூர்வ கருத்துகளை சமர்பிப்பதற்கான கடைசி இம்மாதம் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு ஒழுங்கு முறை விதிகள் மீதான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 19-ம் தேதியாகும்.
இந்த வரைவு திருத்த ஒழுங்குமுறை விதிகள் மீதான கருத்துகள், ஆட்சேபனைகளை adv.ca@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தொலைத்தொடர்பு ஆலோசகர் திரு விவேக் கரேயின் தொலைபேசி எண்ணில் (+91 -11-20907772) தொடர்பு கொள்ளலாம் என்று ட்ராய் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268819®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2269003)
आगंतुक पटल : 8