பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்றத்தால் ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
02 APR 2026 10:59PM by PIB Chennai
நாடாளுமன்றத்தால் ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இந்த மசோதா குறிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். காலாவதியான விதிகளையும் முறைப்படுத்தல்களையும் அகற்றி, குற்ற மயத்தை நீக்குவதன் மூலம் வழக்குச் சுமைகளை குறைத்து, விரைந்து பைசல் செய்வதை இது உறுதி செய்கிறது.
இந்த மசோதா தயாரிக்கப்படுவதில் கலந்தாலோசனை அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்துள்ள பிரதமர், இந்த நடைமுறையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“வாழ்க்கையை எளிதாக்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை இது ஊக்கப்படுத்தும்.
ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா 2026 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இந்த மசோதா குறிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். காலாவதியான விதிகளையும் முறைப்படுத்தல்களையும் அகற்றி, குற்ற மயத்தை நீக்குவதன் மூலம் வழக்குச் சுமைகளை குறைத்து, விரைந்து பைசல் செய்வதை இது உறுதி செய்கிறது.
இந்த மசோதா தயாரிக்கப்படுவதில் கலந்தாலோசனை அணுகுமுறை பின்பற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நடைமுறையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி.”
***
SS/SMB/LDN/SE
(रिलीज़ आईडी: 2268859)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada