பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டென்மார்க் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 6:45PM by PIB Chennai

டென்மார்க் நாட்டின் பிரதமராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சனுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - டென்மார்க் இடையே, பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள், நீடித்த எதிர்காலத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்வதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-டென்மார்க் நாடுகளிடையே 'பசுமை உத்திசார் ஒத்துழைப்பை' மேலும் வலுப்படுத்தவும், மக்களின் நலனுக்காக இந்த நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல, அந்நாட்டுப் பிரதமர் திரு ஃப்ரெட்ரிக்சனுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகத் திரு. மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது நண்பர் திருமதி மெட்டே ஃப்ரெட்ரிக்சன், டென்மார்க் நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு எனது வாழ்த்துகள்.

இந்தியா - டென்மார்க் இடையே, பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள், நீடித்த எதிர்காலத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா-டென்மார்க் இடையே 'பசுமை உத்திசார் ஒத்துழைப்பை' மேலும் வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் நலனுக்காக இவ்விரு நாடுகளின் நட்புறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், அந்நாட்டுப் பிரதமர் திருமதி ஃப்ரெட்ரிக்சனுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268573&reg=3&lang=1

(Release ID: 2268573)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2268627) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam