நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தளங்களில் உள்ள மறைமுக முறைகேடுகளுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

प्रविष्टि तिथि: 03 JUN 2026 2:06PM by PIB Chennai

டிஜிட்டல் தளங்களில், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தி, அவர்களின் விருப்பத் தேர்வுகளைப் பாதிக்கும் வகையில், மறைமுக முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக, ஃபிசிக்ஸ்வாலா லிமிடெட்,   மெக்காஃபி சாஃப்ட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு, தலைமை ஆணையர் திருமதி நிதி காரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அபராதம் விதித்துள்ளது.

ஃபிசிக்ஸ்வாலா நிறுவனத்திற்கு ரூ 5 லட்சமும், மெக்காஃபி நிறுவனத்திற்கு ரூ 1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும், தங்களது டிஜிட்டல் தளங்களிலிருந்து இதுபோன்ற முறைகேடான நடைமுறைகளை அகற்றவும், நுகர்வோர் மீது எந்தவித அழுத்தமோ அல்லது தவறான வழிநடத்துதல் ஏதுமின்றி, அறிந்து வைத்துள்ள விபரங்களின்படி, தேர்தெடுப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020, மறைமுக முறைகேடுகளைத் தடுத்தல் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், 2023 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஃபிசிக்ஸ்வாலா நிறுவனத்தின் டிஜிட்டல் தளத்தில் உள்ள சில நடைமுறைகளை சிசிபிஏ தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டதன் மூலம், தடையற்ற, விபரங்களை அறிந்து கொண்டு தேர்வு செய்யும் நுகர்வோரின் செயல்திறனைப் பாதிக்கும், இடைமுக வடிவமைப்புகள் மூலம் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் போது, இந்த நிறுவனந்த்தின் அறக்கட்டளைக்கு ரூ 10 நன்கொடையாக அளிப்பதற்கு நுகர்வோரின் ஒப்புதல் இல்லாமல், அதனை செலுத்த வேண்டிய மொத்தத் தொகையுடன் சேர்க்கப்படும் வகையில் மென்பொருள் வடிவமைப்பு இருந்தது.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், திருமணம் தொடர்பான உணர்வுப்பூர்வமான தகவல்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நன்கொடையைத் தொடருமாறு அவர்களை ஊக்குவித்தது.

"இலவசம்" என்று விளம்பரப்படுத்தப்பட்ட படிப்புகளை, பயனர்கள் தங்களது மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை அளித்த பின்னரே அவற்றைப் பயன்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268302&reg=3&lang=1

 

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2268607) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu