மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பன்மொழி செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ‘வியோமா’ புத்தாக்க சவாலைத் தொடங்கியது டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு
प्रविष्टि तिथि:
02 JUN 2026 7:34PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, கரண்ட் ஏஐ மற்றும் கல்ப இம்பாக்ட் அமைப்புகளுடன் இணைந்து 'வியோமா புத்தாக்க சவால்' என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இணைய வசதி இல்லாத அல்லது குறைவான இணைய வசதி கொண்ட பகுதிகளிலும் இயங்கக்கூடிய, பல மொழிகளை ஆதரிக்கும் குரல் வழிச் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
கிளவுட் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பைச் சார்ந்திருக்காமல், இந்திய மொழிகளில் உரையாடல் ரீதியிலான செயற்கை நுண்ணறிவு அனுபவங்களை வழங்கும் நோக்கில் இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கப் புதிய தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவை வழங்கல் போன்ற துறைகளில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தேர்வு செய்யப்படும் குழுக்களுக்கு நிபுணர்களின் வழிகாட்டுதல்களும், வெற்றி பெறும் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் வரையிலான பரிசுகளும், அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268112®=3&lang=1
Release ID: 2268112
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268181)
आगंतुक पटल : 9