உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுடன், நேபாளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ர கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே தலைமையிலான குழு இன்று சந்திப்பு

प्रविष्टि तिथि: 02 JUN 2026 8:28PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ர கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே தலைமையிலான நேபாள தூதுக்குழுவுடன் புதுதில்லியில் இன்று சந்திப்பு நடத்தினார்.

 

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில், "ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ர கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே தலைமையிலான நேபாள தூதுக்குழுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று சந்திப்பு நடத்தினார். தேர்தலில் ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ர கட்சி பெற்ற வெற்றிக்காக திரு லாமிச்சானேவுக்கு உள்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்; புதிய அரசின் வெற்றிக்கு இந்தியாவின் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான சிறப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இணைந்து செயல்படுவதற்கான தங்களின் உறுதியான தீர்மானத்தை இருதரப்பும் வெளிப்படுத்தின".

Release ID: 2268143

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2268177) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati