பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025-ஐ மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை வழங்குகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUN 2026 12:47PM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வழங்கும் விழா புதுதில்லியில் 2026 ஜூன் 3 அன்று நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 42 சிறந்த பஞ்சாயத்துகளுக்கு  மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் ஆகியோர் இவ்விருதுகளை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக 2025 ஏப்ரல் 24 அன்று, 3 சிறப்புப் பிரிவுகளின் கீழ், 2025-ம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து ராஜ் விருதுகளை  பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து நீடித்த வளர்ச்சி பிரிவின் கீழ், 34 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும், நானாஜி தேஷ்முக் சிறந்த பஞ்சாயத்து நீடித்த வளர்ச்சி பிரிவின் கீழ், 8 பஞ்சாயத்துகளுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் விருது பெறும் பஞ்சாயத்துகளின் பணிகள், சிறந்த நடைமுறைகள் தொடர்பான மின் புத்தகமும் வெளியிடப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267843&reg=3&lang=1

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2268013) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Kannada , Malayalam