பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்கல திபசா விழாவையொட்டி பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2026 10:31AM by PIB Chennai

உத்கல திபசாவின் சிறப்பு நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.04.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் ஆன்மீக சிறப்புடனும் உயர்ந்து நிற்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.  ஒடியா இசை, கலை, கலாச்சாரம் ஆகியவை  எண்ணற்ற வழிகளில் இந்தியாவை வளமைப்படுத்தியுள்ளது. ஒடிசா மக்கள் தங்களுடைய உறுதிப்பாடு, எளிமை, அன்பு ஆகியவற்றால் அறியப்பட்டவர்கள் என்றும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.  எதிர்வரும் காலத்தில் ஒடிசா புதிய உச்சத்தை அடையட்டும் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“உத்கல திபசாவின் சிறப்பு நாளையொட்டி வாழ்த்துகள். ஒடிசா மாநிலம் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் ஆன்மீக சிறப்புடனும் உயர்ந்து நிற்கிறது.  ஒடியா இசை, கலை, கலாச்சாரம் ஆகியவை  எண்ணற்ற வழிகளில் இந்தியாவை வளமைப்படுத்தியுள்ளது. ஒடிசா மக்கள் தங்களுடைய உறுதிப்பாடு, எளிமை, அன்பு ஆகியவற்றால் அறியப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர்.  எதிர்வரும் காலத்தில் ஒடிசா புதிய உச்சத்தை அடையட்டும்”.

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267967) வருகையாளர் எண்ணிக்கை : 33