பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் வாவ்-தரத் பகுதியில் சுமார் & ரூ.ஒ20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

प्रविष्टि तिथि: 31 MAR 2026 7:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ்-தரத் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு அவர், வட குஜராத்திற்கான சுமார் ₹20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். புனித நவராத்திரி விழா சமீபத்தில் நிறைவடைந்ததையும், பகவான் மகாவீர் ஜெயந்தி இன்று அனுசரிக்கப்படுவதையும் குறிப்பிட்ட பிரதமர், அன்னை அம்பாஜி மற்றும் பகவான் ஸ்ரீ தரணிதர்ஜி ஆகியோருக்குத் தமது மரியாதையைச் செலுத்தினார்.

இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் எரிசக்தி, சாலைகள், ரயில்வே மற்றும் வீட்டுவசதித் துறைகளை உள்ளடக்கியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய  பிரதமர் திரு மோடி, "₹20,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றி, இங்குள்ள வாழ்க்கைக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்று உறுதிப்படுத்தினார்.

 

உலகளாவிய நிலைமை குறித்துப் பேசிய பிரதமர், பல நாடுகள் போர், ஸ்திரத்தன்மையின்மை மற்றும் விண்ணை முட்டும் எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் தவித்துவரும் வேளையில், வல்லரசு நாடுகளில்கூட டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஆனால் இந்தியா தனது வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் மக்களின் ஒற்றுமையின் மூலம் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கோவிட் பெருந்தொற்றின் போது தேசம் காட்டிய ஒன்றுபட்ட செயல்பாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போதைய சவாலான காலங்களிலும் குடிமக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "உலகம் தவிக்கும் வேளையில் இந்தியா ஸ்திரத்தன்மையைப் பேணுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது, இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்," என்று கூறி பிரதமர் திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247377&reg=3&lang=1  

***

TV/RB


(रिलीज़ आईडी: 2267953) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam