பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத்தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2026 12:50PM by PIB Chennai

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகையும், காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ₹50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திரமோடி”

***

(Release ID: 2247197)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267945) வருகையாளர் எண்ணிக்கை : 27