பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை காத்யாயனியின் ஆசிர்வாதத்தை உணர்த்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 24 MAR 2026 8:06AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆசிகளை காத்யாயனியின் ஆசிகளை வேண்டி, அன்னை ஜகதாம்பிகை வழிபாடு மனதை எல்லையற்ற ஆற்றலாலும் உள் வலிமையாலும் நிரப்புகிறது என்றும், அன்னையின் தெய்வீக ஒளி இதயத்தை உயர் உணர்வால் ஒளிரச் செய்கிறது என்றும் கூறியுள்ளார். தெய்வீகத்திற்கும் வீரத்திற்கும் வடிவமான இந்த தேவியின் ஆசிகளால், அவரது பக்தர்கள் அனைவரும் அளவற்ற வலிமையையும் தன்னம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார்.

அசுரர்களை அழிப்பவளும், ஒளிமயமான புன்னகையுடன் திகழ்பவளுமான காத்யாயனி தேவி மங்களத்தை அருளட்டும் என அந்த ஸ்லோகம் கூறுகிறது.

தெய்வீகத்திற்கும் வீரத்திற்கும் அதிதேவியான அன்னையின் அருள், அவளுடைய பக்தர்கள் அனைவருக்கும் அளவற்ற வலிமையையும் தன்னம்பிக்கையையும் வழங்கட்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

***

(Release ID: 2244243)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267838) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam