பிரதமர் அலுவலகம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மக்களவையில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 MAR 2026 9:05PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மக்களவையில் தாம் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். போரினால் உருவாகியுள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் பாதுகாப்புக்கு அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருவதாகவும், மேலும் முழுமையான திறன், விழிப்புணர்வு, தயார்நிலையுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"மேற்கு ஆசியாவில் தற்போது நடைபெற்று வரும் போர், இந்தியாவிற்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த நெருக்கடி குறித்து நாட்டின் நாடாளுமன்றத்திலிருந்து ஒருமித்த, ஒன்றுபட்ட குரல் உலக அளவில் ஒலிப்பது அவசியமாகும்."
"போர்ச் சூழலை அடுத்து, அரசு இந்தியர்களின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும், உடனடியாகவும் அரசு எடுத்து வருகிறது."
"இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து நமது விவசாயிகளைப் பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையிலும்கூட, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது."
"மேற்கு ஆசியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தலைவர்களுடனும் நான் பேசியுள்ளதோடு, பதற்றத்தைத் தணித்து இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர்களை வலியுறுத்தியுள்ளேன். இப்பகுதியில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பையும், அவை பத்திரமாகச் செல்வதையும் உறுதி செய்வதற்கான ராஜ்ய ரீதியிலான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."
"நாடு முழுவதும் உள்ள சாதாரண குடும்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதிலேயே எங்கள் கவனம் இருந்து வருகிறது. எனவே, வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோருக்கு எல்பிஜி கிடைப்பதை நாங்கள் முன்னுரிமைப்படுத்தியுள்ளோம்."
***
(Release ID: 2244194)
TV/PLM
(रिलीज़ आईडी: 2267819)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam