மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ள ராமசியா கிராமத்தில் தேசிய அளவிலான 'விவசாய நிலங்கள் பாதுகாப்பு இயக்கத்தை' தொடங்கி வைத்தார். ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த இயக்கம், இயற்கை விவசாயம், நீர் பாதுகாப்பு, அறிவியல் பூர்வமான விவசாய முறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மண் வள அட்டையின் அடிப்படையில், தேவைக்கேற்ப மட்டுமே உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். ரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து விவசாயச் செலவு அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த இயக்கத்தின் மூலம், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மண் பரிசோதனை, நவீன விதைப்பு முறைகள், மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதே மத்திய அரசின் முக்கிய முன்னுரிமை என்று திரு சவுகான் குறிப்பிட்டார். சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகியவையும் இந்த இயக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எதிர்கால சந்ததியினருக்காக மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைவரின் பங்களிப்புடன் இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267507®=3&lang=1
***
(Release ID: 2267507)
SS/SE/RJ