நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்ட அளவியல் சீர்திருத்தங்களை நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆய்வு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2026 3:23PM by PIB Chennai
வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் சட்ட அளவியல் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிராந்திய ஆய்வுகளின் ஒரு பகுதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. மக்கள் நம்பிக்கை (விதிகளில் திருத்தம்) சட்டம், 2026 மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இந்த மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறைச் செயலாளர் திருமதி. நிதி கரே தலைமை தாங்கினார்.
இந்த வார தொடக்கத்தில் தென் மாநிலங்களுடன் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆலோசனைகளைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு சட்ட அளவியல் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சீர்திருத்தங்களை சுமூகமாகவும், சீராகவும், திறம்படவும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இத்துறையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்த கூட்டம் அமைந்துள்ளது.
இக்கூட்டத்தின் போது, துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சட்ட அளவியல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இணக்கச் சுமையைக் குறைத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குவது மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் அதிக நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267221®=3&lang=1
***
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267320)
வருகையாளர் எண்ணிக்கை : 9