விவசாயத்துறை அமைச்சகம்
ஜூன் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் ‘விவசாய நிலங்கள் பாதுகாப்பு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளது
प्रविष्टि तिथि:
30 MAY 2026 3:47PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், விவசாய நிலங்களைக் காப்போம் இயக்கம் என்பதை வெறும் விழிப்புணர்வுத் திட்டமாக மட்டும் இல்லாமல், பண்ணைகள், விவசாயிகள் மற்றும் கிராமங்களை ஒன்றிணைக்கும் ஒரு விரிவான தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தினார். தில்லியில் இன்று (30.5.26) நடைபெற்ற, இந்த இயக்கத்திற்கான ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு. சிவராஜ் சிங், இந்த இயக்கத்தின் முக்கியக் கவனம், உரங்களைச் சமச்சீராகவும் விவேகத்துடனும் பயன்படுத்துதல், வானிலை சார்ந்த சவால்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குதல், பஞ்சாயத்து அளவில் தீவிரப் பங்கேற்பை உறுதி செய்தல் மற்றும் பல்வேறு திட்டங்களின் பயன்களை நேரடியாகக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றின் மீது இருக்கும் என்று கூறினார்.
ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த இயக்கத்தை, பயனுள்ளதாகவும் விளைவு சார்ந்ததாகவும் மாற்றும் வகையில், பண்ணைகளைக் காத்தல், செலவுகளைச் சமநிலைப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரிய வழிகாட்டுதலை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த இயக்கம், 'மேலிருந்து கீழ்நோக்கிய' மாதிரியில் செயல்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாறாக, பஞ்சாயத்து முதல் மாநில மற்றும் மத்திய அரசுகள் வரை அனைத்து மட்டங்களிலும் பரஸ்பர கூட்டுறவு உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ரசாயன உரங்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டைக் குறைப்பதே இந்த இயக்கத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் வலியுறுத்தினார். மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் மற்றும் பிற வேளாண் உள்ளீடுகளைச் சமச்சீராகப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பசுந்தாள் உரங்கள், இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த வேளாண் பொருட்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க அவர்களை ஊக்குவிப்பதும் இந்த இயக்கத்தின் முக்கிய இலக்காகும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த நேரடி செயல்விளக்கங்களும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266965®=3&lang=1
***
TV/PKV/RJ
(रिलीज़ आईडी: 2267262)
आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Gujarati
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Odia
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Malayalam