நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரளாவில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது - வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2026 1:43PM by PIB Chennai

வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் கொச்சி பிரிவு நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் செயல்பாடுகளில், சட்டவிரோத விநியோகம் மற்றும் கடத்தலுக்காகக் கொண்டுவரப்பட்ட மெத்தாக்குவோன், மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்களும், மன அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்களும் 'சக்ரவியூஹ' நடவடிக்கையின் கீழ் கொச்சி, மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 24 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் ஊக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகள் உட்பட ஐந்து நபர்கள் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பறிமுதல்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு வழிகள் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைத் தகர்ப்பதற்கான டிஆர்ஐ-யின் தொடர்ச்சியான விழிப்புணர்வையும் அதன் கவனமான முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த நிதியாண்டில், டிஆர்ஐ-யின் கொச்சி மண்டலப் பிரிவு கேரளாவில் சுமார் ரூ. 70.76 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் தூண்டும் பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன், பல்வேறு வழக்குகளில்  21 பேரைக் கைது செய்தது.

***

(Release ID: 2266940)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267007) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam