திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
சர்வதேசத் திறமைப் போட்டியில் இந்திய அணி அசத்தல் : இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 6:29PM by PIB Chennai
தைவானின் தைபே நகரில் கடந்த மே 26 முதல் 28 வரை நடைபெற்ற 'தைபே கேபிடல் கோப்பை 2026' சர்வதேசத் திறன் போட்டியில், இந்திய இளைஞர்கள் சிறந்து விளங்கி 2 வெள்ளிப் பதக்கங்களையும், 3 தகுதிப் பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை எதிர்கொண்டு, இந்தியத் திறன் வல்லுநர்கள் தங்கள் தொழில்நுட்பத் திறமையை உலக அரங்கில் நிரூபித்துள்ளனர்.
பதக்கப் பட்டியலில் முஸ்கான் மற்றும் அர்ஜுன் சுமதி விஜயபாஸ்கர் ஆகியோர் மொபைல் செயலி உருவாக்க பிரிவில் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும் முகமது மஃபாஸ், சுரேஷ் குமார் மற்றும் முகமது செராஜ் ஆகியோர் அந்தந்தப் பிரிவுகளில் தகுதிப் பதக்கங்களை வென்றனர்.
சாங்காய் நகரில் நடைபெறவுள்ள உலக திறன் 2026 போட்டிக்கு ஒரு முன்னோடியாக அமைந்த இந்த வெற்றி, இந்தியா உலகளாவிய திறன் மையமாக உருவெடுப்பதை உறுதிப்படுத்துகிறது. வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சியாளர்களையும் மத்திய அமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி பாராட்டியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266731®=3&lang=1
***
TV/VK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266888)
வருகையாளர் எண்ணிக்கை : 7