இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மே 29 முதல் 31 வரை மூன்று நாள் பயணமாக ஷில்லாங் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 1:31PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மூன்று நாள் பயணமாக மே 29 முதல் 31, 2026 வரை, மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங் செல்கிறார்.

அவரது இப்பயணத்தின் போது, மத்திய இளைஞர் நலன் சார்ந்த விவகாரங்கள், விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய இளைஞர் நலன் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.

மே 30-ம் தேதியன்று, மேகாலயா மாநில முதலமைச்சர் திரு. கான்ராட் கே. சங்மாவுடன் இணைந்து, ஷில்லாங்கில் அமைக்கப்பட்டுள்ள 'ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை' மன்சுக் மாண்டவியா திறந்து வைக்கிறார்.

ரூ. 132.9 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகம், கூடைப்பந்து, இறகுப்பந்து (பேட்மிண்டன்), கைப்பந்து (வாலிபால்) மற்றும் பிற உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில், நவீன மற்றும் பல்வகை செயல்பாட்டுத் திறன் கொண்ட ஒரு விளையாட்டு மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266180&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266392) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Khasi , Urdu , हिन्दी , Assamese , Gujarati