வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா குயின் அன்னாசிப்பழ உற்பத்தித் திட்டத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 8:22PM by PIB Chennai

திரிபுரா முதலமைச்சருடன் இணைந்து, திரிபுரா மாநிலத்தில் அன்னாசி சாகுபடி மேம்பாட்டிற்காக ரூ 236 கோடி மதிப்பிலான “குயின் அன்னாசிப்பழத் திட்டம்என்ற திட்டத்தை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம், திரிபுரா மாநிலத்தின் தனித்துவ விற்பனைக்கான புவிசார் குறியீடு பெற்ற குயின் அன்னாசிப்பழ உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, 2026-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முதல் 2028-ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு வரையிலான மூன்றாண்டு கால செயல் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மாநிலத்தில் ஒருங்கிணைந்த அன்னாசிப்  பழ சாகுபடிக்கான சூழலமைப்பை ஏற்படுத்துவதற்கான தொழில்கள், வர்த்தகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள், மத்திய வேளாண் மேம்பாட்டு அமைச்சகம், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம், ட்ரைஃபெட் மற்றும் திரிபுரா மாநில அரசின் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

வடகிழக்கு பிராந்தியத்தை உயர் மதிப்புள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் மையமாக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை, மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266039&reg=3&lang=2

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266261) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Assamese , Khasi , English , Urdu , हिन्दी , Manipuri