பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விநியோகம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழு ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 7:54PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான மேற்கு ஆசியாவுக்கான முறைசாரா அமைச்சர்கள் குழு, இன்று (மே 27, 2026) புது தில்லி, கடமை மாளிகையில் நடைபெற்ற தனது ஆறாவது கூட்டத்தில், மேற்கு ஆசிய சூழ்நிலையை ஆய்வு செய்து, இந்தியாவின் தயார்நிலை நடவடிக்கைகளை மதிப்பிட்டது. இக்கூட்டத்தில், ரசாயனம்  உரங்கள் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, எரிசக்தி துறை அமைச்சர் திரு மனோகர் லால், பெட்ரோலியம் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, நாட்டின் விநியோகச் சங்கிலிகளின் திறன் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டில் விநியோக நிலைமை இயல்பாக உள்ளது என்றும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் போதுமான இருப்பை உறுதிசெய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றை பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடினமான காலங்களில், உலகளாவிய இடையூறுகளின் தாக்கம் மக்கள் மீது குறைவாக இருப்பதை உறுதிசெய்து, தொலைநோக்குப் பார்வையுடனும் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அமைச்சர்கள் குழு நன்றி தெரிவித்தது.

 

மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் தயார்நிலையை மேம்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு திரு ராஜ்நாத் சிங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266030&reg=3&lang=2

***

TV/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266090) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Kannada