குடியரசுத் தலைவர் செயலகம்
சிக்கிம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 6:34PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் இன்று (மே 27, 2026) நடைபெற்ற சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சிக்கிம் அதன் இயற்கை அழகு, கலாச்சாரம், பல்லுயிர் பெருக்கத்திற்காக ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது என்றார். இமயமலையின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான கஞ்சன்ஜங்கா, சிக்கிமுக்கு இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
2016-ம் ஆண்டில் சிக்கிம் இந்தியாவின் முழுமையான, முதல் இயற்கை வேளாண் மாநிலமாக ஆனது எனவும் இது மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். வளர்ச்சியும் இயற்கை பாதுகாப்பும் உண்மையிலேயே கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை சிக்கிம் நிரூபித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிக்கிம் தற்போது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியிருப்பது, சிக்கிம் மக்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக அவர் சிக்கிம் அரசுக்கும் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சி இன்றியமையாதது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
முன்னதாக இன்று, சிக்கிமின் காங்டாக்கில், பெண்களுக்கான இளஞ்சிவப்பு நிறப் பேருந்து, திடக்கழிவு மேலாண்மைக்கான வாகனங்கள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265982&v=3231232423sdcdvchg®=3&lang=2
***
TV/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266083)
வருகையாளர் எண்ணிக்கை : 6