வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – கனடா இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து கனடாவில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் விவாதித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 10:54AM by PIB Chennai

இந்தியா – கனடா இடையே பொருளாதார உறவுகளை புத்துயிர் பெறச்செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்துறை  தலைவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு கனடா நாட்டின் ஒட்டாவா சென்றடைந்தது. கனடாவிற்கு 3 நாள் பயணமாக  சென்றுள்ள அவர்கள், மே 25 அன்று ஒட்டாவா சென்றனர்.  மே 26, 27 ஆகிய தேதிகளில் டொரோன்டோவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியா – கனடா இடையே இருதரப்பு வர்த்தகம், பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டு குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயணம் அமைந்துள்ளது.

தமது பயணத்தின்  முதல் நாள் அன்று ஒட்டாவாவில் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், வேளாண்மை, உத்திசார்ந்த துறைகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவதற்காக திரு கோயல், கனடாவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உயர்நிலைக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

கனடா பிரதமர் திரு மார்க் கார்னியை சந்தித்த திரு கோயல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். பிரதமர் திரு கார்னி அண்மையில், இந்தியாவில் பயணம் மேற்கொண்டது குறித்து நினைவுகூர்ந்தார். அந்தப் பயணம், இந்தியா – கனடா இடையேயான நட்புறவுக்கு புதிய உத்வேகத்தையும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் அளித்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பினரும், ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் உரையாடினார்கள். அத்துடன், இந்தியா – கனடா இடையே விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை விரைவில், மேற்கொள்வது குறித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265263&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265373) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Malayalam