சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலுவையில் உள்ள சுரங்கம் மற்றும் ஆய்வுத் திட்டங்களை விரைந்து நிறைவுசெய்யுமாறு மத்திய அமைச்சர் திரு கிஷண் ரெட்டி அனைத்து முகமைகளுக்கும் அறிவுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 3:09PM by PIB Chennai

நாட்டின் கனிமப் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த வளர்ச்சி நோக்கங்களை வலுப்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து நிறைவு செய்யுமாறு அனைத்து சுரங்கம் மற்றும் ஆய்வு முகமைகளுக்கு மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி  அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியப் புவியியல் ஆய்வு மையம்தேசிய பாறை இயக்கவியல் நிறுவனம்இந்தியச் சுரங்கப் பணியகம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி ஆய்வுப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் பெங்களூரில் நடைபெற்ற தொடர் உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். தொழில்நுட்பம்வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவை ஒவ்வொரு நிறுவனச் செயல்முறையின் அடித்தளமாக அமைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இத்துறையில் செயல்படும் ஒவ்வொரு முகமையிடமிருந்தும்மக்களும் மத்திய அரசும் விரைவு, பொறுப்புடைமை உண்மையான விளைவுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர் என்று கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையுடன், கனிம வளங்கள் ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துதல், நீடித்த சுரங்க நடைமுறைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264946&reg=3&lang=1

***

SS/IR/LDN/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2265035) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada