விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வேகத்தில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

प्रविष्टि तिथि: 22 MAY 2026 7:43PM by PIB Chennai

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதில், "ஆட்சி நிர்வாகம் என்பது கோப்புகளில் மட்டும் சுருங்காமல், மக்களின் வாழ்க்கையில் நேரடியாக வெளிப்பட வேண்டும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறவும் அலைக்கழிக்கப்படக் கூடாது என உத்தரவிட்டார். இதற்காகப் புகார்களைக் கண்காணிக்கத் தனி அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் காகிதத்தோடு நிறுத்தாமல், பயனாளிகளுக்கு நிதியுதவி உண்மையிலேயே போய்ச் சேர்ந்ததா என்பதைத் தொலைபேசி மூலம் சரிபார்க்கவும், ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தினார். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264314&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2264613) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Odia , Kannada